வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது.
1700 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருந்தாலும் தெலுங்கு மொழியில் வெளியான ஆந்திர, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதே காரணம் என்கிறார்கள். தெலுங்கு மாநிலங்களில் 'சிடட்' என அழைக்கப்படும் ஏரியாவில் மட்டும் லாபத்தைப் பெற்றுள்ளதாம். சில ஏரியாக்களில் நஷ்டமும், சில ஏரியாக்களில் நஷ்டமில்லாத விதத்தில் வசூலையும் பெற்றுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அது போல அமெரிக்காவில் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அங்கும் குறைவான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. ஹிந்தியில் மிகப் பெரும் லாபத்தைப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைத்துள்ளது. கேரளாவில் எதிர்பார்த்த வசூல் இல்லாத காரணத்தால் நஷ்டம் வரலாம் எனத் தகவல்.
பொங்கல் வரை பெரிய படங்கள் இல்லாததால் இன்னும் பத்து நாட்களுக்கு 'புஷ்பா 2' படம் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது.