ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகாக குடும்பம் நடத்தும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றிற்காக படங்களில் நடிப்பதை தவிர்த்த ஜோதிகா, குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு தற்போது செலெக்ட்டிவான நல்ல கதையைம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை முன்னிட்டு மும்பைக்கு குடி பெயர்ந்து உள்ளனர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர்.
பெரும்பாலும் நட்சத்திரங்கள் தங்களது குழந்தைகளை வெளியுலகுக்கு அவ்வளவாக காட்டுவதை விரும்புவதில்லை. சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் புகைப்படங்கள் எப்போதாவது ஒருமுறை தான் மீடியாக்களில் வெளியாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற சூர்யா - ஜோதிகா இருவரும் தியா, தேவ் இருவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அது மட்டுமல்ல புகைப்படக்காரர்கள் தங்களை புகைப்படம் எடுப்பதற்கு அழகாக பொறுமையாக போஸும் கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.