ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் வெளிவந்த நாளில் இருந்தே புதுப்புது வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது ஹிந்தியில் மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்திய அளவில் புதிதாக 700 கோடி கிளப்பை 'புஷ்பா 2' ஆரம்பித்து வைத்துள்ளது. படம் வெளிவந்த 19 நாட்களில் ஹிந்தியில் மட்டுமே 704 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை வெளிவந்த எந்த ஒரு நேரடி ஹிந்திப் படமும் இந்த வசூல் சாதனையைப் புரிந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. முதன் முதலில் 500 கோடி வசூல் சாதனையை 'பாகுபலி 2' படம் ஆரம்பித்து வைத்தது. அதை இந்த ஆண்டு வெளிவந்த 'ஸ்திரீ 2' ஹிந்திப்ப டம் முறியடித்து 600 கோடி வசூலைக் கடந்தது. அந்த வசூலை தற்போது 'புஷ்பா 2' முறியடித்து 700 கோடி வசூலை ஆரம்பித்து வைத்துள்ளது.
இந்த சாதனை முறியடிக்கப்பட இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதை ஏதாவது ஹிந்திப் படம் முறியடிக்குமா அல்லது தெலுங்குப் படமே முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.