ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'மிஸ்டர்.பாரத்'. யு டியூபில் பிரபலமான பாரத் என்ற புதுமுகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை நிரஞ்சன் எழுதி இயக்குகிறார். சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரணவ் முனிராஜ் இசை அமைக்கிறார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1986ம் ஆண்டு வெளியான ரஜினி படத்தின் டைட்டிலான 'மிஸ்டர்.பாரத்' பெயரிலியே இந்த படம் தயாராகிறது. ரஜினி படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து. இந்த படம், அந்த படத்தின் தொடர்ச்சி, ரீமேக் என்ற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனார் நிரஞ்சன் கூறும்போது, “இது மிகவும் எளிமையான கதைக்களம். கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். பிடிவாதமான குணம் கொண்ட ஒருவன் காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால், ஒரு பெண்ணே முன் வந்து அவனிடம் காதல் சொல்லும்போது அதை அவனால் உணரக்கூட முடியவில்லை.
இது நிறைய ஆச்சரியங்களைக் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் படம். மற்றபடி ரஜினி சாரின் மிஸ்டர்.பாரத் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பை பயன்படுத்த அனுமதித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு நன்றி" என்றார்.