ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் படங்களை வெளிநாட்டில் வெளியிடும் பிரைடே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'டிராக்டர்'. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர். இது அவரது முதல் திரைப்படம் இது.
படத்தில் நடித்துள்ள நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப், பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி, சிறுவன் கோவர்தன் உள்ளிட்ட அனைவருமே புதுமுகங்கள். கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் யந்த்ரா கூறும்போது “நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான நமது விவசாயத்தை இன்றைய கார்பரேட் நிறுவனங்கள் எப்படி அழிக்கின்றன என்பதை மக்களுக்கு உரக்கச் சொல்ல வரும் இந்த டிராக்டர் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.