தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க துவங்கியுள்ளார். முதல் படமாக 'பென்ஸ்' எனும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாம் படத்தை அறிவித்துள்ளார். இவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
அதன்படி, அறிமுக இயக்குனர் நிரஞ்சன் இயக்கத்தில் யு-டியூப்பில் பிரபலமான பாரத் மற்றும் கட்சி சேர பாடலில் நடனமாடி பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 'மிஸ்டர் பாரத்' என தலைப்பு வைத்துள்ளதாக காமெடி கலந்த ஒரு முன்னோட்ட வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இதில், லோகேஷ் கனகராஜூம் நடித்திருக்கிறார்.
1986ல் ஏவிஎம் தயாரிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், அம்பிகா உள்ளிட்டோர் நடிப்பில் ‛மிஸ்டர் பாரத்' என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது அதேபெயரில் இந்த படத்தை தயாரிக்கிறார் லோகேஷ். அதுமட்டுமல்ல லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.