புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
ராயன் படத்தை அடுத்து தனுஷ் இயக்கி உள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். கதாநாயகனாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
2025ம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்தார் தனுஷ். இந்த படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ ஆகஸ்ட் 30ம் தேதி வெளியானது. அந்த பாடல் யு-டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுதவிர காதல் பெயில் என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஏடி என்ற மூன்றாவது பாடல் டிசம்பர் 20ம் தேதியான நாளை வெளியாகிறது. இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.