பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? |
பிப்ரவரி 21 நேற்றைய தினம் 'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராமம் ராகவம், ஈடாட்டம், பல்லவபுரம் மனை எண் 666, பிறந்தநாள் வாழ்த்துகள்” ஆகிய ஆறு படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 'டிராகன், நி.எ.மே.எ. கோபம்' இரண்டு படங்கள்தான் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்துள்ளன.
தனுஷ் இயக்கியுள்ள 'நி.எ.மே.எ. கோபம்' படத்திற்கான விமர்சனங்கள் பரவாயில்லை ரகத்தில் உள்ளன. புதுமுக, வளரும் நட்சத்திரங்கள் என்பதால் தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகையும் சுமாராகவே உள்ளது. இருப்பினும் படம் முதல் நாளில் 3 கோடி வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்திற்கான விமர்சனம் நன்றாகவே வந்துள்ளது. இளம் ரசிகர்கள் இப்படத்தை விரும்பிப் பார்க்க வருவதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 8 கோடி வரை வந்திருக்கும் எனத் தகவல். இன்றும், நாளையும் அதை விட வசூல் அதிகமாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இரண்டு படங்களுமே தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. அங்கும் ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.