ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனித்துவமானவர் சந்திரபாபு, எல்லோரும் எம்ஜிஆரை பார்த்து பயந்த காலத்தில் அவரையே எதிர்த்து நின்றவர், இந்திய ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்டவர், திருமணமானவுடன் தனது மனைவி இன்னொருவரை காதலிக்கிறார் என்பதை தெரிந்தவுடன் அவருடன் சேர்த்து வைத்தவர், அந்த காலத்திலேயே மாடியில் கார் பார்க்கிங் வைத்து வீடு கட்டியவர், ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்டவர் இப்படி பல விஷயங்கள் அவரது வாழ்க்கையில் இருக்கிறது.
அவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலரும் முயற்சித்தனர். அது இப்போதுதான் கைகூடி வந்திருக்கிறது. துல்கர் சல்மான் நடித்த 'ஹே சினாமிகா' படம் மற்றும் 'ராமன் தேடிய சீதை', 'சாருலதா', அலோன்' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்காக சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிய அனுமதியை பெற்றுள்ளார்களாம். எழுத்தாளரும், இயக்குநருமான கே.ராஜேஷ்வர் எழுதிய 'தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு' என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் தயாராகிறது. திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகனும், மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல் எழுதுகின்றனர். சந்திரபாபுவாக தனுஷ் நடிப்பதாக சொல்கிறார்கள்.