புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் இந்த படத்தின் பாடல் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகள் மட்டுமே மீதமுள்ளது. தற்போது முருகதாஸ் ஹிந்தியில் சல்மானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடித்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.
இதனிடையே இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகின்ற 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.