7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் |
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்களுக்கு எதிராக பேசியதால் அதையடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மீடியாக்களை சந்தித்த கஸ்தூரி சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்தை முன்வைத்து ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ''2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கணக்கு மைனஸ் ஆகிவிடும் என்று விஜய் கூறியிருப்பது மட்டும் உண்மையானால் அவரது வாயில் நான் சர்க்கரை போடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ''திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் அங்கிருந்து வெளியே வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் திருமாவளவன் அவரது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் இருவரும் இனிமேல் விடுதலை சிறுத்தை கட்சியில் தொடர்ந்து பயணிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
மேலும் உதயநிதி ஸ்டாலின், விஜய் சொன்ன கருத்துக்களை சினிமா செய்தியாக நான் பார்க்கிறேன் என்று கூறுகிறார். அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை பற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன். உதயநிதி அவர்கள் தரக்குறைவாக பேசுவது என்பது புதிய விஷயமல்ல. அவர் இன்றைக்கு விஜய்யையும், ஆதம் அர்ஜுனாவையும் சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பு இந்து சனாதனத்தை பற்றி அப்படி பேசினார். அதற்கு முன்பு ரஜினியை சொன்னார். இதுபோன்று அவர் அடிக்கடி மற்றவர்களை தரக்குறைவாக பேசுகிறார். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,'' என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை கஸ்தூரி.