இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. தற்போது அவர் நடித்திருக்கும் புஷ்பா- 2 படம் பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதோடு இந்த படம் ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5ஆம் தேதியான நாளை இந்த படம் உலகம் எங்கும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ராஜசேகர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர், நடிகர் அல்லு அர்ஜுனின் பழைய தோற்றத்தை பார்க்கும் போது இப்போது வேறு மாதிரியாக இருக்கிறார். அவரது உதடு, மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெரிகிறது என்று ஒரு கருத்து கூறியிருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஒரு கருத்து வெளியிட்டதற்கு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் தனது முகத்தில் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. நடக்காத ஒன்றை நடந்தது போன்று இந்த டாக்டர் அவதூறு பரப்புகிறார் என்று அவருக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.