ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பல கதைகள் கொண்ட ஒரே திரைப்படத்தை அந்தாலஜி வகை படம் என்கிறோம். தற்போது அந்த மாதிரியான படங்கள் அதிகமாக வருகிறது. குறிப்பாக ஓடிடி தளத்திற்காக அவைகள் தயாரிக்கப்படுகிறது. கடைசியாக 'இறுகப்பற்று' என்ற படம் வந்தது. ஆனால் இந்தியாவிலேயே முதல் அந்தாலஜி படம் தமிழில்தான் தயாரானது. 'சிரிக்காதே' என்ற தலைப்பில் வெளிவந்த இந்த படத்தில் யம வாதனை, அடங்காப்பிடாரி, புலிவேட்டை, போலிச் சாமியார், மாலை கண்ணன் என்ற தலைப்பில் 5 கதைகள் இடம் பெற்றது. அனைத்துமே நகைக்சுவை கதைகள்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி.எம்.ஏழுமலை, டி.எஸ்.துரைராஜ், எம்.எஸ்.முருகேசன், பி.எஸ்.ஞானம் எனப் பலர் இதில் நடித்திருந்தனர். ஸ்ரீ ரஞ்சனி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார்.
'அடங்காப்பிடாரியை' ஆர். பிரகாஷ் இயக்க டி. மணி ஐயர், டி. கிருஷ்ணவேணி, கே.என்.ராஜம், கே.என்.கமலம், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் நடித்தனர். 'மாலைக் கண்ணனை' ஜித்தன் பானர்ஜி இயக்கினார். அதில் எம்.எஸ்.முருகேசன், இ.கிருஷ்ணமூர்த்தி, பி.சாமா, பி.எஸ்.ஞானம், நாகலட்சுமி, ராதா பாய், மீனாட்சி ஆகியோர் நடித்தனர். யம வாதன் படத்தையும் பானர்ஜியே இயக்கினார்.
'போலிச் சாமியார்' படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நடித்திருந்தனர். 5 கதைகளும் சென்னையில் இருந்த நியூட்டன் ஸ்டூடியோவில் ஒரே நேரத்தில் படமானது. படம் 1939ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.