6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
சின்னத்திரையின் வானிலை அறிவிப்பாளராக அறிமுகமானவர் மோனிகா. 30 நிமிட செய்திகளில் கடைசி இரண்டு நிமிடம் இவர் வாசிக்கும் வானிலை செய்திக்கு அன்றைக்கு தனி ரசிகர்களே இருந்தார்கள். அதன் பிறகு 'தெய்வம் தந்த வீடு, அபூர்வ ராகங்கள், வள்ளி' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார், 'திருவிளையாடல்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமுவேல் மேத்யூ என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சினிமா, சீரியல் இரண்டையும் விட்டு விலகிய மோனிகா, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி துணிச்சலாக அரசியல் கருத்துகளை பேசி வந்தார். இவரது கணவர் '7 மைல்ஸ் பெர் செகண்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அரசியல் கட்சிகளுக்கு திட்டமிடுதல், வியூகம் அமைத்து கொடுக்கும் பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.
தற்போது இந்த நிறுவனத்தின் பெயரில் மோனிகாவும், அவரது கணவரும் இணைந்து தயாரித்துள்ள படம்தான் 'மிஸ் யூ'. தமிழ் தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்நாத் நடித்துள்ளனர். என்.ராஜசேகர் இயக்கி உள்ளனர். படம் நாளை வெளிவருகிறது.
இதுகுறித்து மோனிகாவின் கணவர் சாமுவேல் மேத்யூ கூறும்போது “2011ல் நாளைய இயக்குனர்கள் சீசன் 1ல் ஐந்து பேர் பைனலிஸ்ட்.. கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி, அஜய் ஞானமுத்து, பாலாஜி மோகன், ஐந்தாவதாக சாமுவேல் மேத்யூ.. அது நான். மற்ற எல்லோருமே படம் பண்ணி விட்டார்கள். அதிலும் சித்தார்த்தை வைத்து படம் பண்ணினார்கள். 13 வருடம் கழித்து நான் அந்த சைக்கிளை பூர்த்தி செய்கிறேன்.
இந்த படம் சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகத்தான் போய்விட்டது. இந்த படத்தின் மேக்கிங் சமயத்தில் படத்தை பலமுறை பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தன்னம்பிக்கையின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. நாம் நிச்சயமாக ஏதோ ஒரு நல்லதை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.
இந்த படத்தை பார்த்ததும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதை உடனடியாக வெளியிட முன் வந்ததும் எங்களுக்கு ஏதோ ஒரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அதேபோலத்தான் சர்வதேச பார்ட்னராக ஐங்கரனும், ஓடிடி பாட்னராக அமேசானும் இணைந்ததில் இன்னும் அதிக மகிழ்ச்சி” என்றார்.