மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஒரே இரவில் எழுதிய கதைதான் 'ஓர் இரவு' என்ற பெயரில் திரைப்படம் ஆனது. அதேபோல கே.பாக்யராஜ் ஒரே இரவில் எழுதிய கதைதான் 'இன்று போய் நாளை வா'. ஒரே பெண்ணை காதலிக்கும் 3 நண்பர்களின் கதை. அந்த பெண்ணின் மனதை வெல்வது யார்? எப்படி என்பதுதான் திரைக்கதை. மூவரில் ஒருவர், பணக்காரர், கல்லூரி மாணவர். இன்னொருவர் ஏழ்மையானவர், வேலைக்குச் செல்பவர். அடுத்தவர், நடுத்தர வர்க்கம், வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழிப்பவர். 1980களின் இளைஞர்களின் காதல் கலாட்டாவை யதார்த்தமாக பிரதிபலித்த படம். காமெடி, சென்டிமென்ட் கலந்த காதல் கதை. அதோடு ஹிந்தி திணிப்பு, வர்க முரண்பாடுகளையும் சொன்ன படம்.
இந்த படத்தில் கே.பாக்யராஜோடு அவரது நிஜமான நண்பர்கள் பழனிச்சாமி, ராம்லி நடித்தார்கள், ராதிகாதான் ஹீரோயின். ராதிகாவின் அப்பா வி.எம்.ஜான். அம்மா காந்திமதி. தாத்தா கல்லாபெட்டி சிங்காரம். ரவுடியாக சூர்யகாந்த். உடன் கைத்தடியாக செந்தில். இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டே முழு கதையும் சொல்வார் கே.பாக்யராஜ். இன்றைக்கு பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படம்.