மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் மஹாராஷ்டிரா மற்றும் மேற்குவங்க கலைகள், சினிமாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரு மாநிலங்களை சேர்ந்த இயக்குனர்கள் தமிழ் படங்களை இயக்கினார்கள். இப்படியான காலகட்டத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற கதையான 'சாந்த சக்குபாய்' தமிழில் திரைப்படமாக உருவானது. இந்த கதை அங்கு தெருக்கூத்தாகவும், கதா காலேட்சபமாவும் சொல்லப்பட்டு வந்தது.
இது ஒரு கிருஷ்ண பக்தையின் கதை. சக்குபாய் தீவிர கிருஷ்ணபக்தை. அவருக்கு சரியான மூளை வளர்ச்சி குறைபாடுள்ள முறை மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு கொடுமையான அத்தை அமைகிறார். அந்த வீட்டில் உள்ள இன்னொருவன் சக்குபாயை அடைய திட்டமிடுகிறான். இந்த நிலையில் சக்குபாய் இந்த துன்பங்களில் இருந்து விடுபட்டு கிருஷ்ணனிடமே தஞ்சமடைய புனித யாத்திரையை மேற்கொள்கிறார்.
தனது பக்தையை துன்புறுத்துகிறவர்களுக்கு பாடம் புகட்ட கிருஷ்ண பரமாத்மா சக்குபாயின் உருவம் தரித்து அந்த வீட்டுக்கு செல்கிறார். அப்பாவியான சக்குபாய் என நினைத்து மாமியார் கொடுமை செய்ய அதற்கு கிருஷ்ணர் கொடுக்கும் பதிலடிதான் கதை. இதற்கிடையில் யாத்திரை சென்ற சக்குபாய் இறந்து விட கிருஷ்ணருக்கு சிக்கல் ஏற்படுகிறது. சக்குபாய் வேடத்தில் இருந்து அவரால் வெளிவர முடியாது. எனவே கிருஷ்ணரை காப்பாற்ற ருக்மணி வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கினார். சோமயராஜூலுவும், கொத்தமங்கலம் சுப்புவும் திரைக்கதையை எழுதினர், துறையூர் ராஜகோபால சர்மா இசை அமைத்திருந்தார். சக்குபாயாக அஸ்வத்தமாவும், கொடுமைக்கார மாமியாராக பனி பாயும், கணபதி பட் கிருஷ்ணராகவும், ராஜமணி ருக்மணியாகவும், சாரங்கபாணி சக்குபாயின் கணவராகவும் நடித்திருந்தார்கள். படம் பெரிய வெற்றி பெற்றது.