இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள வில்லன் நடிகர் ஆன விநாயகன். ஆனால் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு டப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இதற்கு முன் இருந்ததை விட பல மடங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேசமயம் படங்களில் நடித்து பிரபலமாவது ஒரு பக்கம் என்றால் தேவையில்லாத பேட்டிகள், பொது இடங்களில் சண்டை, வாக்குவாதம் என இவற்றின் மூலம் தான் விநாயகன் அடிக்கடி பரபரப்பு செய்திகளில் அடிபடுகிறார்.
அந்த வகையில் தற்போது கோவாவில் தங்கி இருக்கும் விநாயகன் அங்கு உள்ள தெருவோர கடைக்காரர் ஒருவரிடம் கடுமையான வார்த்தைகளால் சண்டை போடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் கோவாவில் உள்ள ஒரு சாதாரண தெருவில் இருக்கும் ஒரு சின்ன கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் விநாயகன். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் கூட விநாயகன் தனது குடும்ப விஷயம் காரணமாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் என்பதால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.