விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாள நடிகரான விநாயகன் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். குறிப்பாக கடந்த 2௦23ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவிற்கு பிரபலமானார். அதே சமயம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் விநாயன்.
அந்த வகையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பதிவில், “தன் காலில் வலுவாக நிற்க முடியாத, கீழே விழுந்தால் நான்கு பேர் தூக்கி நிறுத்தக்கூடிய அளவிற்கு பலவீனமாக உள்ளவர்கள் எல்லாம் போதைப்பொருளை பயன்படுத்தாதீர்கள் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேசமயம் சோகமாகவும் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
அவர் அப்படி கூறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் பிரபல மலையாள நடிகர் சீனிவாசன், பள்ளி மாணவர்கள் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை கூறினார். அந்த மேடையில் இருந்து அவர் இறங்கிச் செல்லும் போது நடைபாதையில் திடீரென தடுமாறி விழுந்தார். இது குறித்து தான் விநாயகன் கூறினார் என்று பலரும் குறிப்பிட்டனர்.
அவர் சொல்வதைப் போல நடிகர் சீனிவாசன் தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை எடுத்து, தற்போது தான் ஓரளவு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை குறிப்பிட்டு அவரை விநாயகன் கிண்டல் அடித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சலீம் குமாரின் மகன் சந்து, விநாயகனின் இந்த கருத்து பற்றி கூறும்போது, ''ஒரு முறை நடிகர் விநாயகனை நான் சந்தித்தபோது என்னிடம் அவர், இப்போது சீனியர் நடிகர்கள் என சொல்லப்படும் பல நடிகர்களும் என்னை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே நிறுத்தி வைத்தனர். ஆனால் உன்னுடைய தந்தை தான் என்னை அவருக்கு அருகில் நிறுத்தி வைத்து பார்த்தவர். அந்த அளவிற்கு மிகவும் அன்பான மனிதர் அவர் என்று கூறினார்..
அப்படி என் தந்தையை பாராட்டிய அவர் தான் என்று இப்படி விமர்சனம் செய்கிறார். இதை என்னவென்று சொல்வது? மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான் அதுகுறித்து அறிவுரை சொல்ல தகுதியான நபர்கள். அது மட்டுமல்ல போதை விழிப்புணர்வு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு இப்படி மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பேசும்போது எல்லோரும் மது அருந்துங்கள்.. உங்கள் உடலை கெடுத்துக் கொள்ளுங்கள் என்றா பேச முடியும்'' என்று வேதனையுடன் கூறியுள்ளார்.