ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற சரசர சாரக்காத்து என்கிற ஒரு பாடலின் மூலமாகவே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். அதை தொடர்ந்து கமலின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் அளவிற்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரான் தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் வரும் நவம்பர் 29ம் தேதி சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் மிஸ் யூ படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். இந்த படத்தை என்.ராஜசேகர் என்பவர் இயக்கி உள்ளார்
இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜிப்ரான் இயக்குனரிடம் தான் போட்ட நிபந்தனை ஒன்று குறித்து வெளிப்படையாகவே பேசினார். இது குறித்து அவர் பேசும்போது, “எனக்கு தொடர்ந்து சீரியஸ் கதைகள், சைக்கோ கதைகளாக வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. இயக்குநர் ராஜசேகர் கதை சொல்ல துவங்குவதற்கு முன்பே, லவ் பாடல்கள் இருந்தால் நாம மேற்கொண்டு பேசலாம் என்று சொன்னேன். ஏனென்றால் அந்த அளவுக்கு காதல் பாடல்கள் பண்ணுவதை நான் ரொம்பவே மிஸ் பண்ண ஆரம்பித்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.