'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல தரமான படங்களை இயக்கியவர். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என். ஜி. கே, நானே வருவேன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை பிஸியாக இயக்கி வருகிறார். இப்போது செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் புதுப்பேட்டை 2ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " புதுப்பேட்டை 2ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட 80 சதவீதங்கள் முடிவடைந்ததுள்ளது. புதுப்பேட்டை 2ம் பாகம் முழுக்க முழுக்க பையன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகரும். புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான சவால் அதில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றாக சேர்ப்பது தான். ஆனால், என் உயிர் உள்ளவரை புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் " என தெரிவித்தார்.