வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் மேகநாதன். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 60. இவரது தந்தை பாலன் கே நாயர் மலையாள திரை உலகின் சீனியர் நடிகராக இருந்தவர். மேகநாதன் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னை மற்றும் கோவையில் தான் முடித்தார். ஆனாலும் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடிகராக நுழைந்தார். 1983ல் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த அஸ்திரம் என்கிற படத்தில் தான் இவர் அறிமுகமானார்.
அதன் பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் இவரை நிறைய தேடி வந்தன. சமீப வருடங்களாக துணை வில்லன், கெட்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடு மேகநாதனை என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார். ஆக்ஷன் ஹீரோ பைஜூ, பிக்கெட் 43, சண்டே ஹாலிடே, நேரறியான் சிபிஐ, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும்படியானவை. கடைசியாக கடந்த 2022ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான கூமன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.