வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவில் டீசர், டிரைலர், பாடல்கள் என எது யு டியுப் தளத்தில் வெளியானாலும் அதில் விஜய் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்டவைதான் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கும். சமயங்களில் ரஜினிகாந்த்தை விடவும் ஒரு படி உயர்ந்த நடிகர் விஜய் என அவருடைய ரசிகர்கள் சொல்வார்கள்.
ஆனாலும், விஜய்யால் இன்னும் தமிழகம், கேரளா, பெங்களூரு கடந்து அவருடைய சினிமா வியாபார எல்லையை பான் இந்தியா அளவில் விரிவாக்க முடியாமலேயே போய்விட்டது. இன்னும் அவர் நடித்து ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாக உள்ள நிலையில், அப்படியான சாதனையைப் படைக்க முடியாமல் அவருடைய திரையுலகப் பயணம் நிறைவுக்கு வர உள்ளது. அந்த கடைசி படத்தில் அந்த சாதனைகளைப் படைக்க முடியுமா ?.
விஜய்யை விடவும் தெலுங்கு நடிகர்கள் ஏன் கன்னட நடிகர் யஷ் கூட டீசர், டிரைலர்களில் பெரிய சாதனையைப் படைத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு வெளியான 'புஷ்பா 2' டிரைலர் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலராக புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான சாதனை.
இதற்கு முன்பு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'குண்டூர் காரம்' படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வைகைளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. 'புஷ்பா 2' டிரைலர் 24 மணி நேரத்தில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்று தற்போது முதலிடத்திற்கு வந்துள்ளது.
பிரபாஸ் நடித்து வந்த 'சலார்' டிரைலர் 32 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாம் இடத்திலும், விஜய் நடித்து வந்த 'லியோ' 31 மில்லியன் பார்வைகளுடன் 4ம் இடத்திலும், 'தி கோட்' டிரைலர் 29 மில்லியன் பார்வைகளுடன் 5ம் இடத்திலும், 'பீஸ்ட்' டிரைலர் 29 மில்லியன் பார்வைகளுடன் 6ம் இடத்திலும் உள்ளன.
'புஷ்பா 2' டிரைலர் சாதனையை விஜய்யின் கடைசி படமான 69வது பட டிரைலர் முறியடிக்குமா என்பதற்கு நாம் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இருந்தாலும் 24 மணி நேர பார்வைகளின் டாப் 10 படங்களில் விஜய்யின் 4 படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. பிரபாஸ், மகேஷ் பாபு தலா 2, அஜித்திற்கு 'துணிவு' படம், அல்லு அர்ஜுனுக்கு ஒரு படம் என டாப் 10 படங்கள் உள்ளன.