லக்கி பொண்ணுங்க நான்! 'நந்தன்' நாயகி சுருதி | பெருங்களத்தூர் பாலத்தில் இருந்து குதித்த சிவகார்த்திகேயன்! | உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய அஞ்சலி! | நெகட்டிவ் விமர்சனத்தால் வேகமாக சரிந்த கங்குவா படத்தின் வசூல்! | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தின் வித்தியாசமான யோசனையில் விளைந்த “விகடயோகி” | அமரன் படத்திற்காக படமாக்கிய காமெடி காட்சிகளை நீக்கிய ராஜ்குமார் பெரியசாமி! | தனுஷ் எப்படி நன்றி மறந்தார் ? தீயாய் பரவும் வீடியோ | பாலியல் துன்புறுத்தல் எதிர்கொண்ட விஜய் ஆண்டனி பட நடிகை! | விடுதலை 2ம் பாகத்திலும் பாடியுள்ள தனுஷ்! | 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மம்முட்டி, மோகன்லால்! |
நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற டாகுமென்டரியின் டிரைலரில் ‛நானும் ரெளடிதான்' படப்பிடிப்பின் 3 வினாடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தனது அனுமதி இல்லாமல் காட்சிகளை வைத்ததற்காக நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், வழக்கறிஞர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் கோபமடைந்த நயன்தாரா, 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து 2 ஆண்டுகளாக 'என்ஓசி' வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது பரபரப்பாக பேசப்பட்டாலும், சிலர் நயன்தாரா பக்கமும், சிலர் தனுஷ் செய்தது சரியென்றும் விவாதித்து வருகின்றனர். நயன்தாரா தரப்புக்கு தனுஷ் தரப்பில் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவருடைய வழக்கறிஞர் அருண் அனுப்பிய நோட்டீஸை, நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மூன்று பக்க நோட்டீஸையும் பகிர்ந்த அவர், பின்னர், இரண்டு பக்கங்களை நீக்கிவிட்டு, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட பகுதியை மட்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, அந்த நோட்டீஸில் தனுஷின் வழக்கறிஞர் அருண் கூறியுள்ளதாவது: படப்பிடிப்பின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், போட்டோஷூட்கள், வீடியோக்கள் மற்றும் படத்தை விளம்பரப்படுத்த எடுக்கப்படும் வீடியோக்கள் ஆகியவற்றை ஊடகங்கள் உள்ளிட்ட எந்தத் தளங்களிலும் பயன்படுத்தும் உரிமை படத் தயாரிப்பாளருக்கே உள்ளது. நானும் ரௌடிதான் திரைப்படத்திற்கான பதிப்புரிமை (காப்பிரைட்) உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் தனுஷ்தான் உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது.
படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எங்கள் (வண்டர்பார் நிறுவனம்) தரப்பில் பணியமர்த்தப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்டது. கடந்த 22.10.2015 அன்று வண்டர்பார் பிலிம்ஸின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் வண்டர்பாரின் யூடியூப் சேனலில் இருப்பதை 10 ஆண்டுகளாக அறியவில்லை என்பதை நயன்தாரா மறுக்க முடியாது. இதன்மூலம் நயன்தாரா 'நெட்பிளிக்ஸ் இந்தியா' நிறுவனத்தைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். தனுஷ்தான் படத்துடன் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் பிரத்யேக உரிமையாளர். எனவே, அந்தக் காட்சிகளை 24 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும்; இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு கோரப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சட்டம் என்னதான் சொல்கிறது
கலை, இலக்கியம் உள்ளிட்டவைகளில் இதுபோன்ற பதிப்புரிமை சார்ந்த பிரச்னைகள் எழுவது இயல்பான ஒன்றுதான். பதிப்புரிமை சட்டம் 1957ன்படி, இலக்கியம், கலை படைப்புகளுக்கு வழங்கக்கூடியதுதான் பதிப்புரிமை. புத்தகம், இசை, காட்சி சம்பந்தப்பட்டவற்றுக்கு வெவ்வேறு வித பதிப்புரிமைகள் வழங்கப்படுகின்றன.
படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் சட்டப்படி அது தயாரிப்பாளருக்கு சொந்தமானது. அதேநேரத்தில், இச்சட்டத்தில் இலக்கியம், ஆராய்ச்சி சார்ந்தவற்றுக்கு 30 வினாடிகள் வரை பாடல்களையோ, காட்சிகளையோ, அவர்களின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தலாம் என விதிவிலக்கு உள்ளன. ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்தினால் விதிமீறல்தான்.
அதன்படி பார்த்தால், டாக்குமென்ட்ரி வீடியாவை நயன்தாரா வணிக ரீதியாகவே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளார். இதனை இலக்கியம், ஆராய்ச்சி சார்ந்து வகைப்படுத்த முடியாது. எனவே, படப்பிடிப்பு வீடியோவை தயாரிப்பாளர் தனுஷின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது குற்றமாக இருந்தாலும், வெறும் 3 வினாடிகளே பயன்படுத்தப்பட்டதாக நயன்தாரா தரப்பு வாதிடலாம்.