பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல | என் கேள்விக்கு இன்னும் எம்புரான் தயாரிப்பாளர் பதில் சொல்லவில்லை ; இயக்குனர் மேஜர் ரவி பதிலடி | ஹரிதாவின் ரிதம்! |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள கங்குவா படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படம் 2000 கோடி வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிவந்த நிலையில் தற்போது 200 கோடியாவது வசூலிக்குமா என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44 வது படமாவது வெற்றி பெற்று சூர்யாவின் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளுமா? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.
மேலும், இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானபோது இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு கார்த்தி சுப்பராஜ் இது கேங்ஸ்டர் படமில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யா 44வது படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே கூறுகையில், சூர்யா 44வது படம் கேங்ஸ்டர் படமில்லை. வித்தியாசமான காதல் கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் எனக்கும் சூர்யாவுக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தில் எனக்கான ரோல் முக்கியமானதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.