டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடிப்பதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது 12வது படத்தில் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆச்சரியமாக சாஹிபா என்கிற வீடியோ ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். விரைவில் இந்த ஆல்பம் வெளியாக இருக்கிறது. சுதர்சன் சந்து என்பவர் இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். இதில் பாடகியும் ஆல்பம் நடிகையுமான ஜஸ்லீன் ராயல், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆல்பத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்த தன்னை வேறு வழியின்றி இதில் இழுத்து வந்ததில் ஜஸ்லீன் ராயலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
இதுபற்றி அவர் கூறும்போது, “இதற்கு முன் துல்கர்சல்மானுடன் ஜஸ்லீன் ராயல் இணைந்து செய்த ஹீரியே என்கிற மியூசிக் ஆல்பம் எங்கள் வீட்டில் தினசரி ஒலிக்கும் ஒன்று. அதேபோல இந்த ஷாஹிபா பாடலுடன் ஜஸ்லீன் என்னிடம் வந்த போது இந்த பாடலை கேட்டதும் இது அடிக்கடி ரிப்பீட்டாக கேட்கும் ஒரு பாடலாக மாறப்போகிறது என்று தோன்றியது. உடனே மனம் விட்டும் பாராட்டினேன். ஆனால் என்னை நடிக்க கேட்டபோது தயங்கினேன். பல காரணங்களை சொல்லி நடிப்பதை தவிர்க்கப் பார்த்தேன். நீளமான தலைமுடி கொண்ட தோற்றத்துடன் ஒரு காட்சியில் என்னை யோசித்து வைத்திருந்தார் ஜஸ்லீன். ஆனால் நான் வேண்டுமென்றே ஹேர் கட் செய்து விட்டேன். ஆனாலும் பொறுமையாக காத்திருந்து என்னை நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார்” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.




