மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் | மீண்டும் புதிய படம் இயக்கும் கே.எஸ்.அதியமான் | 'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' வெளியீடுகள் தள்ளிவைப்பு ஏன்? | ரகசியமாக 2வது திருமணம் செய்த இயக்குனர் கிரிஷ் | கங்குவாவுடன் மோதும் கிளாடியேட்டர் | மாளவிகா மேனனுக்கு 'போன் டார்ச்சர்' கொடுத்த இளைஞர் கைது | தமிழில் முதல் பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'கங்குவா' | பிளாஷ்பேக்: முதன் முதலில் காடுகளில் படமான 'வனராஜ கார்ஸன்' |
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அடியெடுத்து வைத்த சமுத்திரகனி அதன் பிறகு கடந்த 10 வருடங்களில் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் சேர்த்து ரொம்பவே பிஸியான நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிக முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க அழைக்கிறார்கள். அதேசமயம் மலையாளத்திலும் கூட சமுத்திரக்கனி சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷிகார், திருவம்பாடி தம்பான், கரிங்குன்னம் சிக்சஸ் உள்ளிட்ட படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சமுத்திரகனி. அதேபோல 2016ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாக அவர் மலையாளத்தில் எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‛ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' (ஒரு விசாரணையின் ஆரம்பம்) என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரகனி. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புலனாய்வு திரில்லர் படமான கண்ணூர் ஸ்குவாடு பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும் டிரைலரை பார்க்கும்போதே இந்த படத்தின் வெற்றிக்கான சாத்திய கூறுகள் நிறையவே இருப்பதும் தெரிகிறது.