பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இசையமைப்பாளர் தமன் தற்போது 'புஷ்பா 2' படத்திற்கான பின்னணி இசையை அமைத்து வருவதால் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இயக்குனர் ஷங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து எஸ்ஜே சூர்யா பேசுகையில், “கேம் சேஞ்சர்' படத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பிஸியாக இருப்பதால்தான் ஷங்கர் வரவில்லை,” என்றார்.
அடுத்து நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் ஷங்கர் தவறாமல் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.