விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 400க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் அவருடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
அவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கன்னடத் திரையுலகத்தில் முக்கியமான கதாநாயகனாக இருந்த, மறைந்த நடிகர் விஷ்ணுவர்த்தன், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கும் அவர் தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.
நடிகை லட்சுமி இயக்கத்தில் 1980ல் வெளிவந்த 'மழலைப் பட்டாளம்' படத்தில் விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது டெல்லி கணேஷ்தான். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து 1981ல் வெளிவந்த '47 நாட்கள்' படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நாயகனாக நடித்து 1990ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஜகதக வீருடு அதிலோக சுந்தரி' படத்தின் தமிழ் டப்பிங்கான 'காதல் தேவதை' படத்திலும் சிரஞ்சீவிக்கு டப்பிங் பேசியிருந்தார் டெல்லி கணேஷ்.
இவை தவிர மேலும் சில மொழி மாற்றப் படங்களுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார்.