சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவரது குழுவில் இடம் பெற்ற மைனர் நடனப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளிவந்த ஜானி அவருடைய வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் அவர் நுழைந்ததையும், மகன், மகள் குடும்பத்தினரை சந்தித்ததையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “இந்த 37 நாட்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகள் இன்று இங்கு வரச் செய்தது. உண்மை பல சமயங்களில் மறைந்தாலும் அழியாது, அது ஒரு நாள் வெல்லும். என்னுடைய குடும்பம் சந்திக்கும் இந்த கடினமான தருணம் என் வாழ்நாளில் எப்போதும் என்னை துளைத்து கொண்டே இருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா…' பாடலுக்காக தேசிய விருது ஜானிக்கு அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் வாங்கினார் ஜானி. ஆனால், அவர் போக்சோவில் கைதானதால் அந்த விருதை தேர்வுக்குழுவினர் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.