கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
தமிழ் சினிமாவின் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமாவின் தலைநகராகவும் மெட்ராஸ் ஒரு காலத்தில் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய மெட்ராஸ் நகரில் சில தியேட்டர்கள் கட்டப்பட்டு மக்களை ஆச்சரியத்துடன் சினிமாவைப் பார்த்து ரசிக்க வைத்தன.
கருப்பு வெள்ளை காலத்தில் சென்னையில் நிறைய தியேட்டர்கள் புதிதாக கட்டப்பட்டு மக்களை மகிழ்வித்தன. அவற்றில் பல தியேட்டர்கள் பல காரணங்களால் இடிக்கப்பட்டு மூடப்பட்டன. மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த பல தியேட்டர்கள் மனதளவில் கூட கலைந்து போக ஆரம்பித்துவிட்டன. அவற்றைப் பற்றி யாராவது பேசினால்தான் மீண்டும் அந்த ஞாபகத்திற்குப் போக ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பாக, சென்னை, மயிலாப்பூர் லஸ் சாலையில் அமைந்த பழம் பெருமை வாய்ந்த காமதேனு தியேட்டர் மூடப்பட்டது. சமீபத்தில் அந்தத் தியேட்டர் முற்றிலுமாக இடிக்கப்பட்டுவிட்டது. அந்தத் தியேட்டர் இடிக்கப்பட்ட விஷயத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் கேள்விப்பட்ட பல ரசிகர்கள் அவர்களின் நினைவுகளை தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.
16ம் நூற்றாண்டில் போர்த்து கீசியர்களால் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் என்ற மாளிகையாக இருந்தது காமதேனு தியேட்டர். 1950களில் அந்த மாளிகைதான் காமதேனு தியேட்டராக மாறி செயல்படத் தொடங்கியது. முதலில் பழைய படங்களை வெளியிடும் தியேட்டராக இருந்து பின்னர் புதிய படங்களை வெளியிடும் தியேட்டராக மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு அதிகம் பிடித்த தியேட்டராக மாறியது.
அந்தக் காலத்தில் மவுண்ட் ரோடு பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்குத்தான் மக்கள் சென்று படம் பார்க்கும் வசதி இருந்ததாம். அதை மயிலாப்பூர் பகுதிக்கும் கொண்டு வந்து சேர்த்த பெருமை காமதேனு தியேட்டருக்கு உண்டு.
அப்போது 6 அணா, 10 அணா, 15 அணா என டிக்கெட் கட்டணங்கள் இருந்துள்ளது. மவுண்ட் ரோடில் புதிய படங்கள் ஓடி முடிந்த பின் அந்தப் படங்கள் காமதேனு தியேட்டரில் திரையிடப்படுமாம். பைசா அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 50 பைசா, 1 ரூபாய், 1 ரூபாய் 60 காசுகள், 2 ரூபாய் என அப்போது டிக்கெட் கட்டணங்கள் இருந்திருக்கின்றன.
எம்ஜிஆர், சிவாஜி முன்னணியில் இருந்த போது காமதேனு தியேட்டரும் முக்கியமான தியேட்டராக இருந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தத் தியேட்டர் செயல்பட்டு வந்த போது ரீ-ரிலீஸ் படங்கள்தான் அதிகமாகத் திரையிடப்பட்டு வந்தன.
காலப்போக்கில் பல தியேட்டர்கள் மூடப்பட்ட சூழ்நிலை காமதேனு தியேட்டருக்கும் வந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு தியேட்டர் மூடப்பட்டு, திருமண மண்டபமாக செயல்பட்டு வந்தது. கட்டிடமாக இல்லாமல் போனால் காமதேனு மக்கள் மனதில் கட்டிய கோட்டையை யாரும் அழிக்க முடியாது.
சென்னை, 'காமதேனு' தியேட்டரில் நீங்கள் படம் பார்த்த அனுபவம் உண்டா... மறக்க முடியாத நிகழ்வுகள் இருந்தால், அந்த சுவாரஸ்யங்களை வாசகர்களின் கருத்து பதிவில் சொல்லுங்க.