ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா'. இப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியானது. ஆகஸ்ட் மாதம் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என அறிவித்தார்கள்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. தனுஷின் 51வது படமாக ஆரம்பமான இப்படத்திற்கு மார்ச் மாதம் 'குபேரா' என தலைப்பை அறிவித்தார்கள். அப்போது முதல் போஸ்டரையும் வெளியிட்டார்கள். தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோரது முதல் போஸ்டர்களும் வெளியானது.
2025ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளிக்கு படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம். தனுஷின் 50வது படமாக வெளியான 'ராயன்' படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது. தனுஷ் தற்போது அவரது இயக்கம், நடிப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.