வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
புகை பிடிப்பது, குடிப்பது குறித்து எச்சரிக்கை வாசகங்களை படம் ஆரம்பிப்பதற்கு முன்பும், அப்படியான காட்சிகள் வரும் போதும் அதே வாசகங்களை வைக்கச் சொல்லி உத்தரவிட்ட பின்பும் விளம்பரங்களில் எந்த எச்சரிக்கை வாசகங்களையும் வைக்காமல் விளம்பரப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் புதிய ரிலீஸ் தேதி போஸ்டர் ஒன்றை சற்று முன் வெளியிட்டனர். முன்னர் அறிவிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5ம் தேதியே படம் வெளியாகிறது. அந்த போஸ்டரில் 'புகையிலை பைப்' பிடித்தபடி, கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை அல்லு அர்ஜுன் பார்ப்பது போன்ற புகைப்படத்தை போஸ்டரில் வைத்துள்ளனர்.
முன்னணி நடிகர்கள் பலர் இப்படி எந்த ஒரு சமூக பொறுப்பும் இல்லாமல் இருக்கிறார்களே என சமூக ஆர்வலர்கள் பலரும் கருதுகிறார்கள். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' விளம்பர போஸ்டரில் அவர் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் கொண்ட போஸ்டரை வெளியிட்டார்கள்.
திரைப்படங்களில் புகை பிடிக்கும், மது குடிக்கும் காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகங்களை வைக்க உத்தரவிட்ட மத்திய அரசு, அது போன்ற விளம்பரங்களும் வாசகங்களை வைக்க உத்தரவிட வேண்டும் என்றோ அல்லது அப்படியான விளம்பரங்களே கூடாது என்றோ சொன்னால் மட்டுமே இப்படியான போஸ்டர்கள் கட்டுப்படுத்தப்படும்.