Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி, தனுஷை மனதில் வைத்து கவினை நிராகரித்தது பெரிய தவறு: நெல்சன் வருத்தம்

24 அக், 2024 - 02:53 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-rejecting-Kavin-with-Dhanush-in-mind-was-a-big-mistake:-Nelson-regrets


பிலாமெண்ட் பிக்சர்ஸ், சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'பிளடி பெக்கர்'. இதில் கவினுடன் மாருதி பிரகாஷ்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, பிருத்விராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.

தயாரிப்பாளரான இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி மற்றும் தனுஷையே சிபாரிசு செய்துள்ளார். ஆனால் இயக்குனர்தான் பிடிவாதமாக கவினை நடிக்க வைத்தார்.

இதுகுறித்து நெல்சன் கூறியிருப்பதாவது: 'வேட்டை மன்னன்' படத்தின்போது என்னிடம் சிவபாலன் உதவி இயக்குனராக சேர்ந்தார். 'ஜெயிலர்' படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். 'ஜெயிலர்' பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், 'ஜெயிலர்' வெற்றி பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், 'ஜெயிலர்' படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார். படம் வெற்றி பெற்றதும் 'பிளடி பெக்கர்' தயாரிப்பது உறுதியானது.

கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர்களை சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது.

படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. திரில்லர் படமான இதில் டார்க் காமெடி, என்டர்டெயின்மென்ட் என எல்லாமே இருக்கும்” என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோயின் ஆனார் கிரேஸிஹீரோயின் ஆனார் கிரேஸி 'புஷ்பா 2' புது போஸ்டரில் 'புகையிலை பைப்' பிடிக்கும் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' புது போஸ்டரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
30 அக், 2024 - 03:10 Report Abuse
N Annamalai படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
24 அக், 2024 - 06:10 Report Abuse
ram படம் ஃப்ளாப் ஆனா இன்னும் கஷ்டப்படுவீங்க
Rate this:
vijai -  ( Posted via: Dinamalar Android App )
24 அக், 2024 - 06:10 Report Abuse
vijai விஜய் சேதுபதி தனுஷ் லெவல் வேற
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
24 அக், 2024 - 03:10 Report Abuse
KayD Vjs தனுஷ் எல்லாம் உங்கள சட்டை கூட panni iruka maatanga. Kavin aa அவுங்க கூட compare panna கூட முடியாது... Innum நிறைய develop panna வேண்டியது iruku சும்மா நீங்களே kavin ku பெரிய built up கொடுத்து kavin thala weight ஆகி விட poguthu.. He has long way to run
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)