3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது |
தமிழில் ‛பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான்' போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார்- 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சர்தார் 2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு தான் காலை 6 .34 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி விட்டதாக புகைப்படத்துடன் ஒரு தகவலையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படி அதிகாலையே படப்பிடிப்பு தளத்தில் தான் ஆஜரான செய்தியை அவர் வெளியிட்டதை பார்த்து, உங்களுக்கு அவ்ளோ தொழில் பக்தியான்னு சோசியல் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.