காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அந்த முதல் படமே அவருக்கு நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது. என்றாலும் அதன் பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அவரை பலரும் ராசியில்லாதவர் என்று தவிர்த்து வந்துள்ளார்கள். இந்த தகவலை ஒரு பதிவில் தெரிவித்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, என்னை ராசி இல்லாத இசையமைப்பாளர் என்று பலரும் கூறி வந்த நிலையில், அஜித் நடித்த தீனா படத்திற்கு நான் தான் இசையமைக்க வேண்டும் என்று அஜித் கேட்டுக் கொண்டார் . இந்த படத்தின் மூலம் உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார் அஜித். அதையடுத்து நான் இசையமைத்த தீனா படமும் அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படம் எனக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் அஜித் தான் என்று தெரிவித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.