டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் லியோ. அக்டோபர் 19ம் தேதியான நேற்றோடு இந்த படம் திரைக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எடுத்த எட்டு நிமிட மேக்கிங் வீடியோவை அப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் விஜய், திரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடித்த பல முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள்.




