வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2024ம் ஆண்டின் தீபாவளி அக்டோபர் 31ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் 'அமரன், ப்ளடி பெக்கர், பிரதர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாக உள்ள நிலையில் போட்டி என்பது இருக்கும். இருந்தாலும் தீபாவளி படங்களுக்கான 'சுவாச காலம்' நான்கு நாட்கள் வரை கிடைத்துள்ளது.
நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை தினத்தையும் தீபாவளி விடுமுறையை அனுபவிக்கும் விதத்தில் தமிழக அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. அடுத்த நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் மொத்தமாக நான்கு நாட்களுக்கு தீபாவளி படங்களைப் பார்க்க ரசிகர்களுக்கு நேரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அன்றைய தினம் வெளியாக உள்ள படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமாக இருக்க உள்ளது. தினமும் ஒரு படம் பார்த்துவிட்டு கடைசி நாளில் ஓய்வெடுக்கவோ அல்லது ஊருக்குத் திரும்பவோ வசதியாக இருக்கும். ரசிகர்கள் மனது வைத்தால் மூன்று படங்களுமே குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வெற்றிப் படங்களாகலாம். ரசிகர்களை வரவழைக்கும் விதத்தில் அந்தப் படங்கள் இருந்துவிட்டால் போதும்.