லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதோடு இந்தியன்- 2 படப்பிடிப்பு நடந்தபோது மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அதனால் இந்தியன்- 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மூன்றாம் பாகத்திற்கான பிரமோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால் இந்தியன்- 2 படம் தோல்வியடைந்து விட்டதால் இந்தியன்-3 படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதோடு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து முடித்திருக்கும் தக் லைப் படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு இந்தியன் 3 படத்தை வெளியிட எண்ணி உள்ளனர்.