‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது |
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இப்படத்தில் அவருடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், ஒரு பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இடத்திலிருந்து அந்த பேக்கை இரண்டு பேர் பறித்துக் கொண்டு காரில் தப்பி விடுகிறார்கள். இதையடுத்து தங்கள் இடத்துக்கு சென்று அதை அவர்கள் திறந்து பார்த்த போது, அந்த பேக்கில் ஒரு துப்பாக்கி, ரத்தக்கரை படிந்த கத்தி, பாம் போன்ற பொருட்கள் இருப்பதை பார்த்து பலத்த அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் அந்த இடத்திற்கே சென்று விடுகிறார். அப்போது அவரை பார்த்து, நீங்க யார் அண்டர் கிரவுண்ட் போலீசா? பெரிய டானா? என்று அவர்கள் கேட்க அதற்கு இல்லை என்று பதில் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். எதைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே யாரடி நீ? என்று அவர்கள் கேட்க, கட் பண்ணினால் கீர்த்தி சுரேஷ் கையில் ரிவால்வரை வைத்து சுடும் காட்சிகள் அந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.
இந்த டீசரை பார்க்கும்போது இதில் கீர்த்தி சுரேஷ் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்திருப்பது தெரிகிறது.