‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை | மகாநடி படத்தில் நடிக்க மறுத்த துல்கர் சல்மான்; நாக் அஸ்வின் வெளியிட்ட புது தகவல் | வேலை வேண்டும் என்பதற்காக என்னையே விற்கும் ஆள் அல்ல நான்; ரெஜினா கசான்ட்ரா தில் பேச்சு | பிளாஷ்பேக் : 80 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை கொடுமை பற்றி பேசிய படம் | ஜெய் பீம் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது தவறான முடிவு; மனம் திறந்த சூர்யா |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவர் சுசின் ஷியாம், கடந்த ஏழு வருடங்களாக படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் முதன்முறையாக கிஸ்மத் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு மம்முட்டியின் தி கிரேட் பாதர், மோகன்லாலின் வில்லன் ஆகிய படங்களுக்கு பின்னணி இசை அமைத்து பிரபலமான இவர் தொடர்ந்து பஹத் பாசில் நடித்த வரதன், கும்பலாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், மாலிக் மற்றும் சமீபத்தில் வெளியான ஆவேசம் வரை அவரது பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அது மட்டுமல்ல கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்ணூர் ஸ்குவாட் மற்றும் இந்த வருடம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். சமீபத்தில் தான் ஆவேசம் மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகியவற்றின் இசையை நடைபெற இருக்கும் கிராமி விருது விழாக்களின் தேர்வுக்காக அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவர் பேசும்போது, இன்னும் சில மாதங்களுக்கு நான் ஓய்வெடுக்க போகிறேன். எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. இது நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி கொள்ளவும் என்னையே புதுப்பித்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளார்.