வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
1958ம் ஆண்டு வெளிவந்த படம் 'பதி பக்தி'. இந்த படத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்தனர். பீம் சிங் தயாரித்து இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவாஜிக்கும், ஜெமினிக்கு பெரிய சண்டை நடக்கும். இதன் ஒரு பகுதியாக ஜெமினி கணேசனை பார்த்து சிவாஜி சுட வேண்டும். காட்சிக்கு டம்மி துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது. என்றாலும் சிவாஜி சுட்டபோது டம்மி துப்பாக்கியில் இருந்து டம்பி தோட்டா வெளிப்பட்டு அது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஜி.என்.வேலுமணியின் காலில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. குண்டு பாய்ந்த வேகத்தில் அவரது காலில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்டு சிவாஜி பதறிப் போனார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் ஜி.என்.வேலுமணியை சந்தித்து நலம் விசாரித்த சிவாஜி “நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன். நீங்கள் இப்போது தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறீர்கள். இனி நீங்கள் தயாரிப்பாளராக மாறுங்கள். ஒரு புதிய நிறுவனத்தை தொடங்குங்கள். என்னை வைத்து முதல் படத்தை தயாரியுங்கள். நானே பைனான்சியர் ஏற்பாடு செய்து தருகிறேன். சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தபிறகு தயாரிப்பு பணியை தொடங்குங்கள். பீம் சிங் அத்திரைப்படத்தை இயக்குவார்” என்று கூறினார்.
சிகிச்சை முடிந்து திரும்பிய ஜி.என்.வேலுமணி சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சிவாஜியை வைத்து “பாகப்பிரிவினை” படத்தை தயாரித்தார். இதனை தொடர்ந்து சிவாஜி எம்.ஜி.ஆர் ஆகியோரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்தார் ஜி.என்.வேலுமணி.