ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த வேட்டையன் படம், நான்கு நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக நேற்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை அகற்றினார்கள்.
மூன்று தினங்களுக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினி தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். மேலும், கூலி படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென்று ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதற்கு முன்கூட்டியே தனக்கு இப்படி ஒரு சிகிச்சை இருப்பதாக ரஜினி எங்கள் இடத்தில் தெரிவித்துவிட்டார். அதனால் திடீரென்று அவருக்கு நலக்குறைவு ஏற்படவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி சார் ஏற்கனவே தனக்கு சிகிச்சை இருப்பதாக சொல்லிவிட்டதால் அந்த காலகட்டத்தில் வேறு நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. என்றாலும் அக்டோபர் 16ம் தேதி முதல் ரஜினி மீண்டும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அடுத்தபடியாக அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த கூலி படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.