டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஆசைக்கு ஒரு அளவு உண்டு, சரி, பேராசைக்கு எந்த அளவும் இல்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் படங்களின் வசூல் விவரங்களையே நம்பாத ரசிகர்கள் இருக்கும் உலகம் இது. அப்படியிருக்க சூர்யா நடித்து அடுத்து வெளிவர உள்ள 'கங்குவா' படம் 2000 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்ப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பான் வேர்ல்டு படமாக வெளியாக உள்ள இப்படம் 'சரித்திர சயின்ஸ் பிக்ஷன்' படமாக உருவாகியுள்ளது. சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை வெளியான படங்களில் ஆமீர்கான் நடித்த 'டங்கல்' படம் மட்டுமே மொத்தமாக 1900 கோடியை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்து 'பாகுபலி 2' படம் 1800 கோடியும், 'ஆர்ஆர்ஆர்' படம் 1300 கோடியும், 'கேஜிஎப் 2' படம் 1200 கோடியும், 'ஜவான், பதான்' ஆகிய படங்கள் 1100 கோடியும், 'கல்கி 2898 ஏடி' படம் 1100 கோடியும் வசூலித்தாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
எந்த ஒரு தமிழ்ப் படமும் இதுவரையில் 1000 கோடி வசூலைக் கடந்ததில்லை. அதிகபட்சமாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்பார்கள்.
இந்நிலையில் சூர்யாவின் 'கங்குவா' படம் 2000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அப்படி நடந்தால் அது தமிழ் சினிமாவிற்கும் பெருமைதான். இருந்தாலும் அவர் 'ஓவர் கான்பிடன்ட்' ஆகப் பேசுகிறார் எனப் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




