தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் |
மாநகரம் என்ற படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு கைதி , மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் . அப்போது அவரிடத்தில், வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் காதல் கதையில் எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு...
அவர் பதில் அளிக்கையில், தற்போது நான் எடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவதால் அதே கோணத்தில் யோசித்து வருகிறேன். கூலி படத்தை அடுத்து விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் வேடத்தை இன்னும் பெரிய அளவுல டெவலப் பண்ணி ஒரு படம் எடுக்க போறேன். அதுக்கு அப்புறம் கைதி 2 எடுக்க போறேன். இது மாதிரி நான் கமிட் ஆயிருக்கிற படங்களை இயக்கி முடிப்பதற்கு இன்னும் 5 வருஷம் ஆயிடும். அதனால அதன்பிறகு ரொமான்ஸ் காதல் கதையில் படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.