ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
தனுஷ் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான படம் 'ராயன்'. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் 100 கோடி வசூலைக் கடந்தது. இப்படத்தில் இடம் பெற்ற 'அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட்' உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.
இதில் 'வாட்டர் பாக்கெட்' பாடல் தனுஷின் தம்பியாக நடித்த சந்தீப் கிஷன் மற்றும் அவரது காதலியான அபர்ணா பாலமுரளி இடையிலான ஒரு டூயட் பாடலாக இடம் பெற்றது. சென்னைத் தமிழ் ஸ்டைலில் மாறுபட்ட பாடலாய் அமைந்த இந்தப் பாடல் தற்போது யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
ஏஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்களில் 100 கோடி பார்வைகளைக் கடந்த வது பாடல் இது. இதற்கு முன்பு ''ஆளப் போறான் தமிழன், வெறித்தனம், மல்லிப்பூ வச்சி வச்சி, சிங்கப்பெண்ணே,” ஆகிய பாடல்கள் 100 கோடி பார்வைகளைப் பெற்ற ஏஆர் ரகுமான் பாடல்கள்.