சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த '96' படத்தை இயக்கியதன் மூலம் தனது முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்தவர் இயக்குனர் பிரேம்குமார். அந்த படத்தில் பிரிந்து போன காதலின் வலியை கூறி இளைஞர்களை தன் வசப்படுத்தியவர், சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி, அரவிந்த் சாமியை வைத்து மெய்யழகன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் இடையே ஆறு வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட இவர் அடுத்த படத்திற்கு எத்தனை வருடம் இடைவெளி விடுவார்? என்ன மாதிரி ஜானரில் இவரது கதை இருக்கும்? என்கிற ரசிகர்களின் சந்தேகத்திற்கு தற்போது நடிகர் கார்த்தி பதில் அளித்துள்ளார். ஆம் அடுத்ததாக வரலாற்று படத்தை இயக்குவதற்கு பிரேம்குமார் தயாராகி வருகிறாராம்.
சமீபத்தில் நடைபெற்ற மெய்யழகன் பட வெற்றி சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசும்போது இந்த தகவலை வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, “மெய்யழகன் படம் வெளியான பிறகு பலரிடமும் உரையாடல்களையும் விவாதத்தையும் இந்த படம் துவங்கி வைத்துள்ளது. அந்த அளவிற்கு உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் பிரேம்குமார். அடுத்ததாக ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்து விட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
அடுத்ததாக பிரேம்குமார் இந்த கதையைத்தான் இயக்கப் போகிறாரா இல்லை வழக்கம் போல சமூகப் பின்னணி கொண்ட இன்னொரு படத்தை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்