ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
இயக்குனர் தனுஷ் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியின் முதல் படம் 'ராயன்'. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் 'அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட்' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற பாடல்களாக இருந்தன.
கடந்த ஆண்டு வெளியான படங்களின் பாடல்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த இரண்டாவது பாடலாக 'வாட்டர் பாக்கெட்' படம் இருந்தது. கடந்த வருடக் கடைசியில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்த இந்தப் பாடல் ஏழு மாதங்களில் மேலும் 50 மில்லியன் பார்வைகைளைப் பெற்று தற்போது 200 மில்லியனைக் கடந்துள்ளது.
இப்படத்தின் மற்றொரு ஹிட் பாடலான 'அடங்காத அசுரா' 76 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'ராயன்' படம் 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படமாக அமைந்தது.
தனுஷ் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'குபேரா' இங்கு வரவேற்பைப் பெறவில்லை. அவரது அடுத்த வெளியீடாக அக்டோபர் மாதம் 'இட்லி கடை' படம் வெளியாக உள்ளது. அதன் முதல் சிங்கிள் ஜுலை 27ல் வெளியாகிறது.