Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலியல் புகார் தொடர்பாக நிவின்பாலியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

03 அக், 2024 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Special-Investigation-Team-Interrogates-Nivin-Pauly-in-connection-with-sexual-complaint


மலையாள திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் நிவின்பாலி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை தொடர்ந்து நடிகைகள் பலர் பிரபலங்கள் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளித்து வருகின்றனர்.

அப்படி நடிகை ஒருவர், நடிகர் நிவின்பாலி தன்னை துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் அவர் மீது புகார் அளித்தார். அதே சமயம் நடிகர் நவீன்பாலி இந்த குற்றச்சாட்டு குறித்து மறுத்ததுடன் இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சதி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த குழுவினர் முன்பு நேரில் ஆஜரான நிவின்பாலி இது குறித்து கூறும்போது, தன் மீது கூறப்பட்டுள்ள புகார் ஜோடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் நடிகையின் புகாரில் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட நாளில் தான் துபாயில் இல்லை என்றும் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட படங்களை சேர்ந்த இயக்குனர்கள் கூட ஆதாரத்துடன் சமீபத்தில் தகவல்கள் வெளியிட்டனர் என்றும் விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏமாற்றம் அடைந்த இயக்குனருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த நிகிலா விமல்ஏமாற்றம் அடைந்த இயக்குனருக்கு ... முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பகிரச் சொன்ன ஜாபர் இடுக்கி: நடிகை பரபரப்பு புகார் முன்னணி நடிகர்களுடன் படுக்கையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)