ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

கடந்த 2020 ஜூன் மாதம் பாலிவுட் இளம் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கு காரணம் அவரது காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் என்று சுஷாந்தின் தந்தை கே கே சிங் பீகார் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரித்து வந்தது. இதில் நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சில மாதம் சிறைவாசம் அனுபவித்து அது பின் ஜாமினில் வெளி வந்தார்.
இந்த வழக்கு விசாரணை துவங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் முடிந்த நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த முழு விசாரணையையும் முடித்துள்ள சிபிஐ இது குறித்த விபரங்களை சிறப்பு நீதிமன்றம் வசம் ஒப்படைத்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்பு தான் இந்த வழக்கில் இந்த விசாரணையே போதுமானதா, அல்லது மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமா என்பது குறித்த புதிய விபரங்கள் தெரியவரும்.
இந்த நிலையில் ரியா சக்கரபோர்த்தியின் வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணையை பல கோணங்களில் ஆராய்ந்து தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ள சிபிஐக்கு தன்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.