கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
மலையாள சினிமாவில் உதவி இயக்குனராக இருந்த விஜயன் சென்னை வந்தது நடிப்பதற்காக அல்ல, படம் இயக்குவதற்காக. இங்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு திரைக்கதை, வசனகர்த்தாவாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். முதலில் 'சங்குபுஷ்பம்' என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அந்த படத்தில் ஒரு கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்க முடியாமல் போகவே ஏமாற்றத்தை சந்தித்தார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த நிவாஸ் தான் ஒளிப்பதிவு செய்த 'கிழக்கே போகும் ரெயில்' படத்தில் பாரதிராஜாவின் உதவியாளராக விஜயனை சேர்த்து விட்டார். விஜயனின் தனித்துவமான குரல், உடல்மொழி இவற்றை கணித்த பாரதிராஜா அந்த படத்தில் 'பட்டாளத்தான்' கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இப்படி நடிகரான விஜயன் அதன் பிறகு உதிரிப்பூக்கள், பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள், ரமணா, '7/ஜி ரெயின்போ காலனி' உள்பட ஏராளமான படங்களில், பல்வேறு மொழிகளில் நடித்தார்.
இயக்குனர் கனவுடன் சென்னை வந்து நடிகரான விஜயன் தனது ஆசைக்காக 1991ம் ஆண்டு 'புதிய ஸ்வரங்கள்' என்ற படத்தை இயக்கினார். இதில் வில்லன் கேரக்டரில் நடித்த தேவன் நாயகனாகவும், அவரது ஜோடியாக உத்ராவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். ஆனால் இந்த படம் பாதியிலேயே நின்று போனது. விஜயனின் இயக்குனர் கனவும் கலைந்து போனது.